/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எல்.ஐ.சி., பங்கு விலை 1,000 ரூபாயை எட்டியது
/
எல்.ஐ.சி., பங்கு விலை 1,000 ரூபாயை எட்டியது
ADDED : பிப் 06, 2024 10:41 AM

மும்பை: பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்கு விலை, நேற்று முதன் முறையாக 1,000 ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது. இதுவரை இல்லாத உச்சமாக, நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, நிறுவனத்தின் பங்கு விலை 1,027.95 ரூபாயை எட்டியது. எனினும், வர்த்தக நேர முடிவில், பங்கு விலை 995.75 ரூபாயாக இருந்தது.
இதையடுத்து நேற்று நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 10 மாதங்களில் மட்டும் எல்.ஐ.சி.,யின் பங்கு விலை கிட்டத்தட்ட 94 சதவீதம் அதிகரித்து உள்ளது.
சமீபத்திய பங்கு விலை உயர்வு காரணமாக, நாட்டின் அதிக சந்தை மதிப்பு கொண்ட பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தை எல்.ஐ.சி., பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள், தற்போது தான் முதன் முறையாக 1,000 ரூபாயை எட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 20.74 சதவீதமும்; ஆறு மாதங்களில் 51.77 சதவீதமும்; ஓர் ஆண்டில் 65.83 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட 94 சதவீதம் அதிகரித்துள்ளது.