/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எல்.ஐ.சி.,யின் புதிய இரண்டு திட்டங்கள்
/
எல்.ஐ.சி.,யின் புதிய இரண்டு திட்டங்கள்
ADDED : அக் 16, 2025 11:57 PM

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு பிறகு, 'ஜன் சுரக்ஷா, பீமா லட்சுமி' என புதிய காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில், ஜன் சுரக்ஷா திட்டம், குறைந்த வருமான பிரிவினருக்கு ஏற்ற தனிநபர் சேமிப்பு காப்பீடு திட்டமாகும். 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டோர் இத்திட்டத்தில் இணையலாம். குறைந்தபட்ச அடிப்படை காப்பீடுத் தொகை ஒரு லட்சம் ரூபாய்.
பீமா லட்சுமி திட்டம், பெண்களுக்கான நிலையான ஆயுள் காப்பீடு திட்டமாகும். பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாததால், முதலீடு பாதுகாப்பானது என்பதுடன், உத்தரவாதமான பலன்கள் கிடைக்கும்.
பாலிசி முதிர்ச்சியடையும் போது உத்தரவாதமான தொகையை வழங்குகிறது. 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாய் ஆகும்.