/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஒரு வாரத்தில் ரூ.18.43 லட்சம் கோடி இழப்பு
/
ஒரு வாரத்தில் ரூ.18.43 லட்சம் கோடி இழப்பு
ADDED : டிச 20, 2024 11:47 PM

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்றும், சந்தை குறியீடுகள் அதிக இறக்கத்துடன் நிறைவடைந்தன. இந்த வாரம் மட்டும் நிப்டி 4.77 சதவீதமும்; சென்செக்ஸ் 4.98 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளன. வாராந்திர அடிப்படையில், இது இரண்டு ஆண்டுகளில் காணாத வீழ்ச்சியாகும்
• வட்டி குறைப்பு தொடர்பான அமெரிக்க மத்திய வங்கியின் கணிப்பால், உலகளாவிய சந்தை குறியீடுகள் இறக்கத்தை சந்தித்தன. இதன் தாக்கம், நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகளில் எதிரொலித்தது. ஏற்கனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுணக்கம், பங்குகளின் உயர் மதிப்பு காரணமாக, சந்தை போக்கு பாதகமாக மாறுவதை உணர்ந்த முதலீட்டாளர்கள், பெருமளவில் பங்குகளை விற்பனை செய்ததால், மளமளவென சந்தை குறியீடுகள் சரிந்து திருத்தத்துக்கு வழிவகுத்தது
• நிப்டி குறியீட்டில் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. பொதுத்துறை வங்கி, ஐ.டி., சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 3 சதவீதமும்; வாகனம், எனர்ஜி மற்றும் உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 2 சதவீதமும் சரிவடைந்தன
• தொடர்ச்சியாக ஐந்து வர்த்தக நாட்களும் சந்தை சரிவடைந்ததால், இந்த வாரத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் 18.43 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,598 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.96 சதவீதம் குறைந்து, 72.18 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா உயர்ந்து, 85.04 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
டாக்டர் ரெட்டீஸ்
ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்
ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்
நெஸ்லே இந்தியா
எச்.டி.எப்.சி.,லைப்
அதிக இறக்கம் கண்டவை
டெக் மஹிந்திரா
ஆக்சிஸ் பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
மஹிந்திரா & மஹிந்திரா
டிரென்ட்

