/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
செப்டம்பரில் உற்பத்தி, சேவை வளர்ச்சி குறைவு
/
செப்டம்பரில் உற்பத்தி, சேவை வளர்ச்சி குறைவு
ADDED : செப் 24, 2024 08:04 AM

புதுடில்லி : நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சி நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில், இம்மாதம் குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி அறிக்கையில் தெரிவிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 60.70 புள்ளிகளாக இருந்த எச்.எஸ்.பி.சி., பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 59.30 புள்ளிகளாக குறைந்து உள்ளது.
பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்கள், குறைவான வளர்ச்சி கண்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனினும், குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக பதிவாகியுள்ளதால், வளர்ச்சி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.