தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இரண்டாவது நாளாக சந்தை உயர்வு

இரண்டாவது நாளாக சந்தை உயர்வு

இரண்டாவது நாளாக சந்தை உயர்வு


ADDED : ஜன 24, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் கணிசமான ஏற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தன.

• உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, இந்திய சந்தையில் நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது சரிவுடன் துவங்கியது. இருப்பினும், நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள், முதலீட்டாளர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததுடன், டிரம்பின் ஏ.ஐ., கொள்கை தொடர்பான அறிவிப்பு காரணமாக ஐ.டி., துறை பங்குகள் எழுச்சி கண்டதால், சந்தை கணிசமான ஏற்றம் கண்டது.

• நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், எட்டு துறை பங்குகள் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, தகவல் தொழில்நுட்பத்துறை குறியீடு 1.79 சதவீதம் ஏற்றம் கண்டது. மாறாக, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீடு, 0.51 சதவீதம் இறக்கம் கண்டது.

• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,137 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,825 நிறுவன பங்குகள் குறைந்தும்; 105 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள், 5,463 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.20 சதவீதம் உயர்ந்து, 79.16 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்து, 86.47 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 அல்ட்ராடெக் சிமென்ட்

 கிராசிம்

 விப்ரோ

 ஸ்ரீராம் பைனான்ஸ்

 சன் பார்மா

அதிக இறக்கம் கண்டவை

 பி.பி.சி.எல்.,

 கோட்டக் பேங்க்

 எச்.சி.எல்.,டெக்

 எஸ்.பி.ஐ.,

 ரிலையன்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us