/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நவம்பர் 1ல் சந்தையின் சிறப்பு 'முகூரத் டிரேடிங்'
/
நவம்பர் 1ல் சந்தையின் சிறப்பு 'முகூரத் டிரேடிங்'
ADDED : அக் 21, 2024 12:44 AM

புதுடில்லி:பங்கு சந்தைகளான பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ., ஆகியவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடத்தும் ஒரு மணி நேர சிறப்பு 'முகூரத் டிரேடிங்'கை வரும் நவ., 1ம் தேதி நடத்த உள்ளன.
இந்தியாவின் முன்னணி பங்கு சந்தைகளான மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு மணி நேர சிறப்பு 'முகூரத் டிரேடிங்'கை வரும் நவ., 1ம் தேதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த வர்த்தக அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என, இரு சந்தைகளும் தனித்தனியே தங்கள் சுற்றறிக்கைகளில் தெரிவித்துள்ளன.
'முகூரத்' என்பது கிரக நிலைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல காலத்தை குறிக்கிறது. இந்து நாட்காட்டியின் புதிய நிதியாண்டின் துவக்கமாக பங்கு தரகர்கள் கருதுகின்றனர்.
இதை குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையின் போது ஒரு சிறப்பு அமர்வை என்.எஸ்.சி.,யும், பி.எஸ்.இ.,யும் நடத்துகின்றன.
மேலும், இந்த அமர்வில் மேற்கொள்ளப்படும் பங்கு பரிவர்த்தனைகள் ஆண்டு முழுதும் செழிப்பை கொண்டு வரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறப்பு அமர்வில் ஈக்விட்டி, கமாடிட்டி டெரிவேட்டிவ்கள், கரன்சி டெரிவேட்டிவ்கள், ஈக்விட்டி பியூச்சர் அண்டு ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அண்டு லோனிங் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் வர்த்தகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.