/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மெடி அசிஸ்ட் ஹெல்த்கேர் சர்வீசஸ்
/
மெடி அசிஸ்ட் ஹெல்த்கேர் சர்வீசஸ்
ADDED : ஜன 12, 2024 12:49 AM

கடந்த 2002ம் ஆண்டு, ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்நிறுவனம், காப்பீடு நிறுவனங்களுக்கு மூன்றாம் தரப்பு நிர்வாக சேவைகளை வழங்கி வருகிறது. ஐ.பி.ஓ., வாயிலாக பங்குதாரர்களின் 2.80 கோடி பங்குகளை விற்று, நிதி திரட்டவுள்ளது. புதிய பங்கு வெளியீடு ஏதும் இல்லை.
இந்நிறுவனம், காப்பீடு நிறுவனங்கள், மருத்துவமனைகள், பயனாளிகள் ஆகியோருக்கிடையே மத்தியஸ்தராகவும் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 36 காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நிதி நிலவரம்
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் வருவாய், 519 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம், 74 கோடி ரூபாய்.
துவங்கும் நாள் : 15.01.2024
முடியும் நாள் : 17.01.2024
பட்டியலிடும் நாள் : 22.01.2024
பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., - என்.எஸ்.இ.,
பங்கு விலை : 397 - 418 ரூபாய்
பங்கின் முகமதிப்பு : ரூ.5
மொத்த பங்கு விற்பனை : ரூ.1,171. 58 கோடி
பங்குதாரர்கள் பங்கு விற்பனை : 2.80 கோடி