/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
திருச்சி, மதுரை, துாத்துக்குடியில் விரைவில் பல்வகை சரக்கு பூங்கா
/
திருச்சி, மதுரை, துாத்துக்குடியில் விரைவில் பல்வகை சரக்கு பூங்கா
திருச்சி, மதுரை, துாத்துக்குடியில் விரைவில் பல்வகை சரக்கு பூங்கா
திருச்சி, மதுரை, துாத்துக்குடியில் விரைவில் பல்வகை சரக்கு பூங்கா
ADDED : ஆக 20, 2025 12:36 AM

சென்னை:திருச்சி, மதுரை, துாத்துக்குடி மாவட்டங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் விரைவாக பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்காக, அம்மாவட்டங்களில் பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்காவை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பூங்கா, பி.பி.பி., மாடல் எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சரக்கு போக்குவரத்துக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதன் வாயிலாக, அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும். திருச்சி, மதுரை, துாத்துக்குடியில் பல்வகை சரக்கு பூங்கா அமைப்பதால், அம்மாவட்டங்களில் ஏற்றுமதி சார்ந்து செயல்படும் அனைத்து நிறுவனங்களும் ஒரே இடத்தில் பொருட்களை அனுப்பி, அங்கிருந்து விரைவாக ஏற்றுமதி செய்ய முடியும்.
இதனால், தனித்தனியே அனுப்பும் போது ரயில் கிடைப்பதில் தாமதம், கூடுதல் செலவு தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.