/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., சந்தையில் புதிய எதிர்பார்ப்பு
/
ஐ.பி.ஓ., சந்தையில் புதிய எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 06, 2025 10:11 PM

இந்திய பங்குச்சந்தையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடு சந்தையில் தற்போது சுணக்கம் நிலவி வந்தாலும், 2027ம் ஆண்டு வாக்கில், 30க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குகளை வெளியிட தயாராகி வருவதாக புளும்பர்க் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
வால்மார்ட்டிற்கு சொந்தமான பிளிப்கார்ட், போன்பே, ஓயே ஓட்டல்ஸ் உள்ளிட்டவை இந்த பட்டியலில் அடங்கும் என்றும், இவற்றின் மொத்த சந்தை மதிப்பிடு 100 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் பங்குச்சந்தையில் நுழைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போல் அல்லாமல், புதிதாக நுழைய உள்ள இந்நிறுவனங்கள் வலுவான நிதி செயல்பாடுகளை கொண்டிருப்பதாக ரைன்மேக்கர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றில் பல நிறுவனங்கள் பால பாதையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில், பங்கு வர்த்தக எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

