ADDED : பிப் 29, 2024 11:31 PM

கடந்த 1975ம் ஆண்டு துவங்கப்பட்ட ஜே.ஜி., கெமிக்கல்ஸ், இந்தியாவின் முன்னணி ஜிங்க் ஆக்சைட் உற்பத்தியாளராக உள்ளது. கோல்கத்தாவைச் சேர்ந்த இந்நிறுவனம், 80க்கும் மேற்பட்ட தரத்தில் ஜிங்க் ஆக்சைட் தயாரித்து வழங்கி வருகிறது.
ஜிங்க் ஆக்சைட் டயர் தொழில்துறையினரால் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பேட்டரிகள், வேளாண் ரசாயனங்கள் போன்ற பல்வேறு தொழில்துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
நிதி நிலவரம்
கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 794.19 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 56.79 கோடி ரூபாய்.
துவங்கும் நாள் : 05.03.24
முடியும் நாள் : 07.03.24
பட்டியலிடும் நாள் : 13.03.24
பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., என்.எஸ்.இ.,
பங்கு விலை : ரூ.210 - 221
பங்கின் முகமதிப்பு : ரூ.10
புதிய பங்கு விற்பனை : ரூ.165 கோடி
பங்குதாரர்கள் பங்கு விற்பனை : ரூ.86.19 கோடி
மொத்த பங்கு விற்பனை : ரூ.251.19 கோடி

