ADDED : மார் 07, 2024 01:30 AM

கடந்த 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட பாப்புலர் வெகிக்கிள்ஸ், வாகனங்களுக்கான டீலர்ஷிப் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை, வாகன உதிரி பாகங்கள் வினியோகம், வாகன இன்ஷூரன்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
மாருதி சுசூகி, ஹோண்டா, ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற பிரபல பயணியர் வாகனங்களின் முகவராகவும் உள்ளது.
நிதி நிலவரம்
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 2,848 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 40 கோடி ரூபாய்.
துவங்கும் நாள் : 12.03.24
முடியும் நாள் : 14.03.24
பட்டியலிடும் நாள் : 19.03.24
பட்டியலிடப்படும் சந்தை :↔பி.எஸ்.இ., என்.எஸ்.இ.,
பங்கு விலை : ரூ.280 - 295
பங்கின் முகமதிப்பு : ரூ.2
புதிய பங்கு விற்பனை : ரூ.250 கோடி
பங்குதாரர்கள் பங்கு விற்பனை : ரூ.352 கோடி
திரட்டப்படவுள்ள நிதி : ரூ.602 கோடி

