sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு


ADDED : ஜூலை 18, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 10:53 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜி.என்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் ஐ.பி.ஓ., விலை ரூ.225 - 237


உலகளவில் பழைய லேப்டாப், கம்ப்யூட்டர்களை பழுது நீக்கி, புதுப்பிக்கப்பட்டதாக மாற்றி, எலக்ட்ரானிக்ஸ் பஜார் என்ற பிராண்டு வாயிலாக விற்பனை செய்து வருகிறது, ஜி.என்.ஜி., எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 460 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது.

புதிய பங்கு விற்பனை வாயிலாக 400 கோடி ரூபாயும்; முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனையில் 60 கோடி ரூபாயும் திரட்டப்படும். இதற்கான பங்கு ஒன்றின் விலை 225 - 237 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. வரும் 23 முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 30ம் தேதி சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.

இண்டிகியூப் ஸ்பேசஸ் பங்கு விலை நிர்ணயம்


பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, வாடகை அலுவலக தீர்வுகளை வழங்கி வரும் இண்டிகியூப் ஸ்பேசஸ், 700 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது.

புதிய பங்கு விற்பனை வாயிலாக 650 கோடி ரூபாயும்; முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனையில் 50 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 225 - 237 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் 23 முதல் 25ம் தேதி வரை, குறைந்தபட்சம் 63 பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us