தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'நிப்டி 50' குறியீட்டுக்கு வயது 30

 'நிப்டி 50' குறியீட்டுக்கு வயது 30

 'நிப்டி 50' குறியீட்டுக்கு வயது 30


UPDATED : மார் 11, 2026 02:07 AM

ADDED : மார் 11, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2026 02:07 AM ADDED : மார் 11, 2026 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ந்தியாவின் முதன்மையான பங்குச் சந்தை குறியீடும், உலக அளவில் பரவலாக கவனிக்கப்படும் குறியீடுகளில் ஒன்றுமான 'நிப்டி 50' குறியீடு, தனது 30 ஆண்டுகால பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இதை முன்னிட்டு நேற்று மும்பையில் உள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமையகத்தில் பிரமாண்ட கொண்டாட்டங்கள் நடை பெற்றன.

இதற்கான விழாவில், செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே மற்றும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, 'நிப்டி பனோரமா' என்ற புத்தகத்தை வெளியிட்டனர். அப்போது பேசிய துஹின் காந்தா பாண்டே, ''நிப்டி என்பது வெறும் குறியீடு மட்டுமல்ல; அது, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னேற்றத்தைக் காட்டும் ஒரு கருவி'' என தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளில், நிப்டி 50 ஒரு பெஞ்ச்மார்க்காக மட்டுமின்றி, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் நம்பிக்கையாகவும் உருவெடுத்துள்ளது என, தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் தெரிவித்தார்.

இந்தியர்களின் பங்கு 36% முன்பு பெரிய நிறுவனங்கள் மட்டுமே லாபம் பார்த்த பங்குச் சந்தையில், இன்று சாதாரண மனிதர்களும் பங்குதாரர்களாக மாறியுள்ளனர். 'நிப்டி 50' குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பில், தனிநபர் முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பங்கு 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றால், இந்தியச் சந்தை நிலைகுலைந்து போகும் நிலை இருந்தது. ஆனால் இன்று, உள்நாட்டு முதலீட்டாளர்களின் பலத்தால் சர்வதேச நெருக்கடிகளையும் இந்திய சந்தை துணிச்சலுடன் எதிர்கொள்கிறது. 1996ல் தொடங்கப்பட்ட நிப்டி 50, இன்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் கண்ணாடியாகத் திகழ்கிறது. முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படையான வர்த்தகம் காரணமாகவே இந்த அசாத்திய வளர்ச்சி சாத்தியமானது. - துஹின் காந்தா பாண்டே, தலைவர், செபி.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us