/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பரிவர்த்தனை கட்டணத்தை குறைக்கிறது என்.எஸ்.இ.,
/
பரிவர்த்தனை கட்டணத்தை குறைக்கிறது என்.எஸ்.இ.,
ADDED : மார் 13, 2024 12:27 AM

மும்பை,:என்.எஸ்.இ., என்னும் தேசிய பங்குச் சந்தையின் ரொக்க மற்றும் முன்பேர வணிக பிரிவுகளில் வர்த்தகம் செய்வது, வரும் ஏப்ரல் மாதம் முதல் மலிவாகிறது.
சமீபத்தில் நடந்த என்.எஸ்.இ.,யின் இயக்குனர் குழு கூட்டத்தில், ரொக்க மற்றும் முன்பேர வணிக பிரிவுகளுக்கான ஒட்டுமொத்த பரிவர்த்தனை கட்டணத்தை, 1 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிவர்த்தனை கட்டணம் குறைக்கப்பட்டதால், நிறுவனத்தின் வருவாயில் 130 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று என்.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
பங்கு தரகர்கள் பணம் செலுத்தாமல் இருந்த காரணத்தால், 'முதலீட்டாளர் பாதுகாவலர் அறக்கட்டளை நிதி' பிரிவில் கையிருப்பை உறுதி செய்யும் நோக்கில், கடந்தாண்டு ஜனவரி மாதம் பரிவர்த்தனை கட்டணங்களை என்.எஸ்.இ., ஆறு சதவீதம் உயர்த்தியது. எனினும், கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த உத்தரவை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

