/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி ரூ. 10,000 கோடி ஐ.பி.ஓ.,
/
என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி ரூ. 10,000 கோடி ஐ.பி.ஓ.,
என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி ரூ. 10,000 கோடி ஐ.பி.ஓ.,
என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி ரூ. 10,000 கோடி ஐ.பி.ஓ.,
ADDED : செப் 19, 2024 02:53 AM

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த என்.டி.பி.சி., நிறுவனத்தின் பசுமை எரிசக்தி பிரிவான என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி, 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
பங்குதாரர்களின் பங்குகள் ஏதுமின்றி, புதிய பங்குகளை மட்டுமே 10,000 கோடி ரூபாய்க்கு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திரட்டப்படவுள்ள நிதியில் 7,500 கோடி ரூபாய், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் இயங்கி வரும் அதன் துணை நிறுவனத்தின் கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படும் என்றும்; மீதமுள்ள தொகை, நிறுவனத்தின் பொதுவான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.பி.சி., குழுமம் வரும் 2032ம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.