/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
என்.டி.பி.சி.,கிரீன் எனர்ஜி 19ல் துவக்குகிறது ஐ.பி.ஓ., ரூ.10,000 கோடி திரட்ட பங்கு வெளியீடு

ADDED : நவ 14, 2024 03:28 AM

புதுடில்லி:'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு, வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்நிறுவனம், பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி.,யின் துணை நிறுவனமாகும்.
இந்நிறுவன பங்குகளை வாங்க, நவ.,22 வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 102 முதல் 108 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நவ.,18ல், 3,960 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளுக்கு, நிறுவன முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதிய பங்கு வெளியீட்டில், 75 சதவீதம் நிறுவன முதலீட்டாளர்களுக்கும்; 15 சதவீதம் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும், 10 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். நவ.,27ல் பங்கு சந்தைகளில் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
திரட்டப்படும் 10,000 கோடி ரூபாயில், 7,500 கோடி ரூபாயை கடன் நிலுவையை செலுத்தவும்; மீதமுள்ள தொகை, நிறுவன பொது நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.