/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
என்.டி.பி.சி., கிரீன்' சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி
/
என்.டி.பி.சி., கிரீன்' சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி
என்.டி.பி.சி., கிரீன்' சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி
என்.டி.பி.சி., கிரீன்' சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி
ADDED : நவ 28, 2024 02:22 AM

மும்பை:பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே, என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி, 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் இணைந்து உள்ளது.
ஐ.பி.ஓ.,வில் 10,000 கோடி ரூபாய் திரட்டி சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி பங்குகள், வெறும் 3.33 சதவீதம் உயர்வுடன், வர்த்தகத்தை துவங்கின.
தொடர்ந்து, நீண்டகால முதலீடு அடிப்படையில், பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், நண்பகல் வர்த்தகத்தின் போது, 12 சதவீதம் உயர்வு கண்டு, பங்கு ஒன்றின் விலை 121.15 ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. இதன் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜியும் சேர்ந்து உள்ளது.