
102
இ ந்தியாவில் உள்ள 102 கடல் உணவுப் பொருட்கள் சோதனை மையங்களுக்கு ஐரோப்பிய யூனியன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1,600
அ தானி பவர் நிறுவனம், மத்திய பிரதேச அரசின் 'பவர் மேனேஜ்மென்ட் கம்பெனி'யிடம் இருந்து, 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக 21,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதானி பவர் தெரிவித்துள்ளது.
6,256
ஜ ப்பானைச் சேர்ந்த எஸ்.எம்.பி.சி., வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் 3.22 கோடி பங்குகளை 6,256 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. பிளாக் ராக், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் அபு தாபி அரசு நிறுவனமனான 'அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி' ஆகியவை இந்த பங்குகளை வாங்கியுள்ளன.