
19,000
இ .சி.எம்.எஸ்., எனும் மின்னணு பொருட்கள் தயாரிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும், இவை மொத்தம் 19,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 22,919 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
40,000
கு ஜராத்தைச் சேர்ந்த நொறுக்குத் தீனி தயாரிப்பாளரான பாலாஜி வேபர்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க, ஐ.டி.சி., பெப்சிகோ மற்றும் தனியார் பங்கு முதலீடு நிறுவனங்களான டி.பி.ஜி., மற்றும் டெமாசெக் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த பங்குகளின் மதிப்பு மொத்தம் 40,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
61.45
நா ட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கிட்டத்தட்ட 35,500 கோடி ரூபாய் அதிகரித்து 61.45 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தங்க கையிருப்பு 31,000 கோடி ரூபாய் அதிகரித்ததே ஒட்டுமொத்த இருப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.