/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இளம்வயதினரில் மூன்றில் ஒருவர் சந்தையி।ல் முதலீடு செய்கின்றனர்
/
இளம்வயதினரில் மூன்றில் ஒருவர் சந்தையி।ல் முதலீடு செய்கின்றனர்
இளம்வயதினரில் மூன்றில் ஒருவர் சந்தையி।ல் முதலீடு செய்கின்றனர்
இளம்வயதினரில் மூன்றில் ஒருவர் சந்தையி।ல் முதலீடு செய்கின்றனர்
ADDED : மே 22, 2025 11:26 PM

புதுடில்லி:கிட்டத்தட்ட 28 வயதுக்கு குறைவான இளம் வயதினரில் மூன்றில் ஒருவர், பங்குச்சந்தை சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, செபி அமைப்பின் தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது:
தற்போது இளம் தலைமுறையினர் பங்குச்சந்தையில் அதிகம் பங்கேற்கின்றனர். மேலும், கடந்த 2019 மார்ச் முதல், சந்தையில் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, மூன்று மடங்கு வளர்ச்சி கண்டு, தற்போது 13 கோடியாக உள்ளது.
சில்லரை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பங்கு மற்றும் கடன் பத்திரங்களில் 93 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு திட்டங்களில் எஸ்.ஐ.பி., வாயிலான முதலீடு, ஆண்டுதோறும் நிலையான வளர்ச்சி கண்டு வருகிறது. ஆண்டு முதலீடு 2018--19ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பதில் இருந்து, 2024--25ல் 2.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துகள் 5 மடங்கு அதிகரித்து, 2025 ஏப்ரலில் 14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.