/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.54,000 கோடியில் ஆலை பல்டோடா குழுமம் திட்டம்
/
ரூ.54,000 கோடியில் ஆலை பல்டோடா குழுமம் திட்டம்
ADDED : ஏப் 10, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கர்நாடகாவின் ஹோஸ்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான பல்டோடா குழுமம், 54,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருக்கு ஆலையை அமைக்க உள்ளது.
மொத்தம் 1.05 கோடி டன் உற்பத்தி திறன் கொண்ட இந்த ஆலை, கர்நாடகாவின் இரண்டாவது மிகப்பெரிய உருக்கு ஆலையாக இருக்கும். முதற் கட்டமாக 35 லட்சம் டன் உற்பத்தி திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக முழு உற்பத்தித் திறன் எட்டப்படும் என பல்டோடா குழுமம் தெரிவித்துள்ளது.

