/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கார்ப்பரேட் முதலீட்டில் உச்சம்: சோலார் துறையில் சாதனை
/
கார்ப்பரேட் முதலீட்டில் உச்சம்: சோலார் துறையில் சாதனை
கார்ப்பரேட் முதலீட்டில் உச்சம்: சோலார் துறையில் சாதனை
கார்ப்பரேட் முதலீட்டில் உச்சம்: சோலார் துறையில் சாதனை
ADDED : ஜன 30, 2024 10:56 AM
புதுடில்லி : கடந்த ஆண்டு, சோலார் பிரிவில், உலகளாவிய கார்ப்பரேட் முதலீடு, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கிட்டத்தட்ட 2.84 லட்சம் கோடி கோடி ரூபாய் அளவுக்கு இருந்ததாக, 'மெர்காம்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது:
கடந்த 2022ல், சோலார் துறையில் மொத்த கார்ப்பரேட் முதலீடு, கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டு 42 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 2.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
துணிகர முதலீடு, பொது சந்தை மற்றும் கடனாக பெற்ற நிதி ஆகியவை இந்த கார்ப்பரேட் முதலீடுகளில் அடங்கும்.
சோலார் துறையில், உலகளாவிய துணிகர முதலீடு மற்றும் தனியார் பங்கு முதலீடு, கிட்டத்தட்ட 57,000 கோடி ரூபாய் அளவில் இருந்தது. கடனாக பெற்ற நிதி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், துணிகர முதலீடுகள் மற்றும் பொது சந்தையில் பெற்ற நிதி ஆகியவை, கடந்த 2010ம் ஆண்டுக்கு பின், இரண்டாவது பெரிய தொகையை பதிவு செய்துள்ளன.
இத்துறையில், வட்டி விகிதங்கள் அதிகமாகவும், சந்தை நிலவரங்கள் சவாலாகவும் இருந்த போதிலும், முதலீடு உச்சம் தொட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.