sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 'அச்சு ஊடக விளம்பர வருவாய் நடப்பாண்டில் 4.40% உயரும்'

/

 'அச்சு ஊடக விளம்பர வருவாய் நடப்பாண்டில் 4.40% உயரும்'

 'அச்சு ஊடக விளம்பர வருவாய் நடப்பாண்டில் 4.40% உயரும்'

 'அச்சு ஊடக விளம்பர வருவாய் நடப்பாண்டில் 4.40% உயரும்'


ADDED : பிப் 24, 2026 01:18 AM

Google News

ADDED : பிப் 24, 2026 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: நடப்பாண்டில் விளம்பர துறை, 9.70 சதவீத வளர்ச்சி அடையும் எனவும், அச்சு ஊடகங்களின் விளம்பர வருவாய் 4.40 சதவீதம் அதிகரிக்கும் எனவும் 'டபிள்யூ.பி.பி. மீடியா' நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர வருவாயின் போக்கு குறித்த அந்நிறுவன அறிக்கை கூறியுள்ளதாவது:

நடப்பாண்டில், நாட்டின் விளம்பர வருவாய் 2.02 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு 1.84 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், 17,844 கோடி ரூபாய் அதிகரித்து 9.70 சதவீத வளர்ச்சி காணும். உலக அளவில் டாப் 10 விளம்பர சந்தைகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

வர்த்தகத்தை அடிப்படையாக கொண்ட விளம்பர துறை, 24.20 சதவீத அளவுக்கு விரைவான வளர்ச்சி அடைய உள்ளது. சில்லரை வர்த்தக தளங்கள், குக் காமர்ஸ், சமூக ஊடக வர்த்தகத்தின் வளர்ச்சி இதற்கு காரணம்.

இது தவிர, வெளிப்புற விளம்பரங்கள், திரைஅரங்குகளில் இடம்பெறும் விளம்பரங்கள் 8.90 சதவீத வளர்ச்சி அடையும்.

ஏ.ஐ., அடிப்படையாக கொண்ட ஊடகங்கள் 8 சதவீத விளம்பர வருவாய் வளர்ச்சி பெறும். அச்சு ஊடகத்துறை, 4.40 சதவீத விவளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விளம்பர கட்டணங்கள் உயர்வு, பல்வேறு துறைகளின் ஆதரவு ஆகியவையே இதற்கு காரணம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us