தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி

 சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி

 சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி


UPDATED : பிப் 21, 2026 03:31 AM

ADDED : பிப் 21, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2026 03:31 AM ADDED : பிப் 21, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் புவிசார் குறியீடு பெற்ற ஜவ்வரிசி முதல்முறையாக கனடா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜவ்வரிசி உற்பத்தியும் விலையும் அதிகரிக்கும் என ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நம் நாட்டிலேயே மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகம். இம்மாவட்டங்களில் உள்ள மண்வளம் மற்றும் காலநிலை காரணமாக இங்கு மரவள்ளிக்கிழங்கு சுவை தனித்து காணப்படுகிறது.

இந்த மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு (சேகோ) 2023ல் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிப்பு பணியில் 334 தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள பேக்டரிகளில் ஆண்டுக்கு சுமார் 35 லட்சம் மூட்டை கள் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாட்டின் ஜவ்வரிசி உற்பத்தியில் 80 சதவீதம் சேலம் மாவட்டம் தான் பங்களிக்கிறது. மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் வர்த்தகர்கள் பெருமளவில் வாங்குகிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து முதன்முறையாக 'அபெடா' என்றழைக்கப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் கனடாவுக்கு முதல் முறையாக ஜவ்வரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் உள்ள அபெடாவின் மண்டல உதவி பொது மேலாளர் ஷோபனாகுமார் கூறுகையில், ''புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி சிறப்பு வாய்ந்தது. இதன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முயற்சியில் முதன்முறையாக 500 கிலோ கனடா நாட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

''ஜவ்வரிசியில் கெமிக்கல் மற்றும் கெமிக்கல் ப்ரீ என இரண்டு வகைகள் உள்ளன. இதில் கெமிக்கல் ப்ரீ ஜவ்வரிசிக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன,'' என்றார்.

Image 1538821


ஜவ்வரிசி ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகையில், “தற்போது ஒரு மூட்டை (90 கிலோ) ஜவ்வரிசி அதிகபட்சமாக 3,329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜவ்வரிசி ஏற்றுமதி அதிகரித்தால் உற்பத்தியும், விலையும் அதிகரிக்கும். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்,” என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us