/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜி.டி.பி.,யில் தனியார் நுகர்வு பங்கு உயர்வு 20 ஆண்டுகளில் பதிவான அதிகபட்சம்

ADDED : ஜூன் 28, 2025 10:42 PM

புதுடில்லி:இந்தியாவின் தனியார் நுகர்வு, வலுவான வளர்ச்சி கண்டு, நாட்டின் ஜி.டி.பி.,யில் கடந்த 20 ஆண்டுகளில் காணாத அளவுக்கு அதிகபட்ச பங்களிப்பை அளித்து இருப்பதாக, மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனியார் நுகர்வின் பங்களிப்பு, நாட்டின் ஜி.டி.,பியில், கடந்த 2023--24ம் நிதியாண்டில் 60.20 சதவீதமாக இருந்த நிலையில், 2024--25ம் நிதியாண்டில் 61.40 சதவீதமாக அதிகரித்து உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பதிவான, இரண்டாவது அதிகபட்ச அளவு இது.
நாடு முழுதும் நுகர்வுக்கான தேவை, தொடர்ச்சியாக வலுப்பெற்று வருவதை காட்டுகிறது. மேலும், தேவை அதிகரிப்பிற்கு, தனியார் நுகர்வு வளர்ச்சி கண்டது, நிலையான முதலீட்டு நடவடிக்கைகள் மற்றும் நிகர ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவை கைகொடுத்துள்ளன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.