/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சந்தையில் நீடித்த ஊசலாட்டம்
/
சந்தையில் நீடித்த ஊசலாட்டம்
ADDED : ஜன 09, 2025 02:11 AM

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவடைந்தன
• நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகள், அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் தொடர்வது, மூன்றாவது காலாண்டு முடிவுகள் இன்று முதல் வெளிவரும் நிலையில், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் பங்குகளை விற்றதால், பிற்பகல் வரை சந்தையில் ஊசலாட்டம் நீடித்தது
• பிற்பகல் வர்த்தகத்தின் போது, தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சற்று உயர்ந்ததால், முடிவில், லேசான இறக்கத்துடன் சந்தை முடிவடைந்தது
• நிப்டி குறியீட்டில், எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்பொருட்கள் சார்ந்த நிறுவனங்களின் குறியீடு மட்டும் உயர்வு கண்டன. மருந்து பொருட்கள், நிதி, உலோகம், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து துறை நிறுவனங்களின் குறியீடுகள் இறக்கம் கண்டன
• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,579 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,391 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 96 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,362 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.79 சதவீதம் உயர்ந்து, 77.66 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 85.91 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
ஓ.என்.ஜி.சி.,
ஐ.டி.சி.,
ஏசியன் பெயின்ட்
டாக்டர். ரெட்டீஸ்
டி.சி.எஸ்.,
அதிக இறக்கம் கண்டவை
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்
டிரென்ட்
அல்ட்ராடெக் சிமென்ட்
ஸ்ரீராம் பைனான்ஸ் பஜாஜ் ஆட்டோ