/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பொதுத்துறை வங்கிகள் நிகர லாபம் 9 மாதங்களில் ரூ.1.30 லட்சம் கோடி
/
பொதுத்துறை வங்கிகள் நிகர லாபம் 9 மாதங்களில் ரூ.1.30 லட்சம் கோடி
பொதுத்துறை வங்கிகள் நிகர லாபம் 9 மாதங்களில் ரூ.1.30 லட்சம் கோடி
பொதுத்துறை வங்கிகள் நிகர லாபம் 9 மாதங்களில் ரூ.1.30 லட்சம் கோடி
ADDED : பிப் 07, 2025 11:33 PM

புதுடில்லி:கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான ஒன்பது மாதங்களில், பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம், இதுவரை இல்லாத அளவாக, 1.30 லட்சம் கோடி ரூபாயை தொட்டது.
முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், இது 31.30 சதவீதம் அதிகமாகும். மத்திய நிதி அமைச்சக தகவலின்படி, பொதுத் துறை வங்கிகளின் இயக்க லாபம், 2.20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. வங்கித் துறையை வலிமைப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால், வாராக்கடன், வரலாற்றில் முதல்முறையாக 0.59 சதவீதமாக குறைந்து 61,252 கோடி ரூபாயானது.
வர்த்தக விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, பொதுத்துறை வங்கிகள், 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் 11 சதவீத வளர்ச்சி கண்டன. அவற்றின் மொத்த வர்த்தகம் 242 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. டிபாசிட் வளர்ச்சி 9.80 சதவீதமாகவும், கடன் வணிக வளர்ச்சி 12.4 சதவீதமாகவும் இருந்தது. கடன் வழங்கியதில், சில்லறை வணிகக் கடன் வளர்ச்சி 16.60 சதவீதமாகவும் வேளாண் கடன் வளர்ச்சி 12.90 சதவீதமாகவும், எம்.எஸ்.எம்.இ., கடன் வளர்ச்சி 12.50 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
வங்கித் துறையை வலுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளின் பலனை இது எடுத்துக் காட்டுவதாக நிதிஅமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.