/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கோவை வாரப்பட்டி ராணுவ பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம் அமைகிறது
/
கோவை வாரப்பட்டி ராணுவ பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம் அமைகிறது
கோவை வாரப்பட்டி ராணுவ பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம் அமைகிறது
கோவை வாரப்பட்டி ராணுவ பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம் அமைகிறது
ADDED : ஜூலை 16, 2025 10:43 PM

சென்னை:கோவை வாரப்பட்டி ராணுவ தொழில் பூங்காவில், பொது - தனியார் கூட்டு முயற்சியில், 10 ஏக்கரில் கிடங்கு வசதியுடன் தயார் நிலை தொழிற்கூடத்தை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது.
சென்னை, திருச்சி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய ஐந்து முனையங்களை உள்ளடக்கி, மத்திய அரசின் ஒப்புதலுடன், தமிழக பாதுகாப்பு தொழில் பெரு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடங்களில் உள்ள பகுதிகளில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொழில் துவங்க, உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, கோவை வாரப்பட்டியில், 372 ஏக்கரில் ராணு உபகரண உற்பத்தி பூங்காவை டிட்கோ மற்றும், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் இணைந்து உருவாக்கி வருகின்றன.
இப்பூங்காவில் உள்ள தொழில் மனைகள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் உடனே தொழில் துவங்கக் கூடிய தயார் நிலை தொழிற்கூடங்களை விரும்புகின்றன. இதனால், காஞ்சிபுரம் வல்லம்வடகால், திருநெல்வேலி கங்கைகொண்டான், ராணிப்பேட்டை பனப்பாக்கம் தொழில் பூங்காக்களில் தயார் நிலை தொழிற்கூடங்களை சிப்காட் நிறுவனம் அமைக்கிறது.
இதை பின்பற்றி தற்போது, வாரப்பட்டி ராணுவ தொழில் பூங்காவில், 10.31 ஏக்கரில் பொது - தனியார் கூட்டு முயற்சியில் தயார் நிலை தொழிற்கூடம் அமைக்க, டிட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொழிற்கூடம் அமையும் மொத்த இடத்தில், 10 சதவீதம் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.