/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எத்தனால் கலப்பு இ20 எரிபொருளால் பாதிப்பில்லை ரெனோ நிறுவனம் விளக்கம்
/
எத்தனால் கலப்பு இ20 எரிபொருளால் பாதிப்பில்லை ரெனோ நிறுவனம் விளக்கம்
எத்தனால் கலப்பு இ20 எரிபொருளால் பாதிப்பில்லை ரெனோ நிறுவனம் விளக்கம்
எத்தனால் கலப்பு இ20 எரிபொருளால் பாதிப்பில்லை ரெனோ நிறுவனம் விளக்கம்
ADDED : ஆக 28, 2025 01:19 AM

புதுடில்லி:'இ 10' எனும், 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ரெனோ கார்களில், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என, 'ரெனோ இந்தியா' நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், இதுபற்றி தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் இ20 உட்பட பல எரிபொருள் கலப்புகளை பயன்படுத்தி பல்வேறு வாகனங்களின் ஆயுள் காலம் குறித்து சோதனை நடத்தப்பட்டதாகவும்; இ10 எரிபொருள் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட கார்களில் இ20 எத்தனால் பயன்படுத்துவதால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என முடிவில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ரெனோ கார்களுக்கும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் வரைவு அறிக்கை, அனைத்து வாகன தயாரிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இ20 பெட்ரோல் பயன்பாட்டால், வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது.
இதை மறுத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இ20 பெட்ரோலால், வாகனங்களின் எரிபொருள் திறன் பாதிக்கப்படுவதாக பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என தெரிவித்தது.

