/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறு தேயிலை உற்பத்தியாளருக்கு கொள்கை வகுக்க கோரிக்கை
/
சிறு தேயிலை உற்பத்தியாளருக்கு கொள்கை வகுக்க கோரிக்கை
சிறு தேயிலை உற்பத்தியாளருக்கு கொள்கை வகுக்க கோரிக்கை
சிறு தேயிலை உற்பத்தியாளருக்கு கொள்கை வகுக்க கோரிக்கை
ADDED : நவ 26, 2025 01:22 AM

கொல்கட்டா:சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கான தேசிய கொள்கையை உருவாக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியை இந்திய சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, பிரதமருக்கு அவ்வமைப்பின் தலைவர் கோபால் சக்ரவர்த்தி கடிதம் எழுதிஉள்ளார். நாட்டின் வருடாந்திர மொத்த தேயிலை உற்பத்தியில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக உற்பத்தி செய்வோர் சிறு விவசாயிகள்தான்.
இருப்பினும் பச்சைத் தேயிலையின் விலை கடுமையான ஏற்ற இறக்கத்தை சந்திப்பதாகவும், இந்த விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது குறைவாக இருப்பதாகவும், போதுமான அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப ஆதரவும் கிடைப்பதில்லை எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.