sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இரண்டாவது நாளாக உயர்வு

இரண்டாவது நாளாக உயர்வு

இரண்டாவது நாளாக உயர்வு


ADDED : ஜன 29, 2025 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 11:54 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் கிட்டத்தட்ட தலா ஒரு சதவீத உயர்வுடன் முடிவடைந்தன

• உலகளாவிய சந்தை போக்குகளை ஒட்டி, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளுடன், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக, நுகர்பொருட்கள் தவிர்த்து அனைத்து துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை நல்ல உயர்வு கண்டது

• நிப்டி குறியீட்டில் நுகர்பொருட்கள் தவிர, அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் குறியீடு 2.91 சதவீதமும்; ஐ.டி., ஊடகத்துறை குறியீடு 2.50 சதவீதமும்; எனர்ஜி, உலோகம் மற்றும் மருந்து துறை குறியீடு கிட்டத்தட்ட 2 சதவீதமும் உயர்வு கண்டன

• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,981 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,005 நிறுவன பங்குகள் குறைந்தும்; 96 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள், 2,586 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.93 சதவீதம் குறைந்து, 76.77 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து, 86.55 ரூபாயாக

இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 ஸ்ரீராம் பைனான்ஸ்

 பெல்

 டாடா மோட்டார்ஸ்

 எஸ்.பி.ஐ.,லைப்

 டிரென்ட்

அதிக இறக்கம் கண்டவை

 ஐ.டி.சி.,ஹோட்டல்ஸ்

 மாருதி

 ஏசியன் பெயின்ட்

 பார்தி ஏர்டெல்

 பிரிட்டானியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us