/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
குபோட்டா ஆலையை மேம்படுத்த ரூ.2,000 கோடி
/
குபோட்டா ஆலையை மேம்படுத்த ரூ.2,000 கோடி
ADDED : அக் 10, 2025 02:50 AM

பரிதாபாத்:ஜப்பானின் குபோட்டா நிறுவனம், உள்நாட்டில் டிராக்டர்கள், கட்டுமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் எஸ்கார்ட்ஸ் குபோட்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்து உள்ளது.
இந்த ஆலை, ஹரியானாவின் பரிதாபாதில் அமைந்துள்ளது. இந்த முதலீடு, தற்போது செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என எஸ்கார்ட்ஸ் குபோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதனால், இந்நிறுவனத்தின் பங்கு விலை 2.9 சதவீதம் உயர்ந்து, 3,629.65 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆலையில், டிராக்டர்கள், கட்டுமான இயந்திரங்கள், ரயில் உதிரிபாகங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.