/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
5 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
/
5 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
ADDED : மே 06, 2025 10:36 PM

புதுடில்லி:சென்னையை தலைமையிடமாக கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனமான வெரிடாஸ் பைனான்ஸ், ஐ.பி.ஓ., வாயிலாக 2,800 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட விண்ணப்பித்து இருந்தது. இதில், 2,200 கோடி ரூபாயை முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாகவும்; 600 கோடி ரூபாயை புதிய பங்குகள் விற்பனை வாயிலாகவும் திரட்ட உள்ளது.
ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்ட மற்றொரு வங்கி சாரா நிதி நிறுவனமான லக்ஷ்மி இந்தியா பைனான்ஸ், ஐ.பி.ஓ. வாயிலாக 1.04 கோடி புதிய பங்குகளுடன், ஏற்கனவே முதலீட்டாளர் வசமுள்ள 56.38 லட்சம் பங்குகளையும் விற்க திட்டமிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்பாளரான அஜய் பாலி, 238 கோடி ரூபாயை புதிய பங்குகள் விற்பனை வாயிலாகவும், 93 லட்சம் முதலீட்டாளர்கள் பங்குகள் விற்பனை வாயிலாக முதலீட்டை திரட்ட உள்ளது.
கொல்கட்டாவை சேர்ந்த ரீகால் ரீசோர்சஸ், 190 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 90 லட்சம் முதலீட்டாளர்கள் பங்குகளையும் விற்பனை செய்யவுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த ஜாஜோ ராஷ்மி ரீப்ராக்டோரீஸ், முற்றிலும் புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 150 கோடி ரூபாயை திரட்ட வருகிறது.