/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
/
கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
ADDED : ஜூன் 11, 2025 12:07 AM

மும்பை:புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, நிதி திரட்ட கென்ட் ஆர்.ஓ. சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுக்கு செபி அனுமதி அளித்துள்ளது.
நீர் சுத்திகரிப்பு நிறுவனமான கென்ட் ஆர்.ஓ.,சிஸ்டம்ஸ், கரம்தரா இன்ஜினியரிங், டிரான்ஸ்பார்மருக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியாளரான மங்கள் எலக்ட்ரிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வைண்டிங் பொருட்கள் தயாரிப்பாளரான வித்யா ஒயர்ஸ் ஆகியவற்றின் 2,500 கோடி ரூபாய் நிதி திரட்டலுக்கான புதிய பங்கு வெளியீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கென்ட் ஆர்.ஓ.,
இந்நிறுவனத்தின் பங்கு விற்பனை முற்றிலும் அதன் பங்குதாரர்களின் ஒரு கோடி பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக திரட்டப்பட உள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் எந்த நிதியையும் பெறாது.
கரம்தரா இன்ஜினியரிங்
இந்நிறுவனம், 1,350 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டிலும், 400 கோடி ரூபாய் அதன் பங்குதாரர்களின் பங்குகள் வெளியீட்டின் வாயிலாகவும் நிதி திரட்டுகிறது.
மங்கள் எலக்ட்ரிக்கல்ஸ்
இந்நிறுவனம், 450 கோடி ரூபாய் மதிப்பிலான முழுமையான புதிய பங்கு வெளியீடாகும். திரட்டப்படும் நிதி, செயல்பாட்டு மூலதனத்துக்கு 122 கோடி ரூபாய், ராஜஸ்தான் ஆலை விரிவாக்கத்திற்கு 120 கோடி ரூபாய், கடனை திருப்பி செலுத்த 96 கோடி ரூபாய் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
வித்யா ஒயர்ஸ்
இந்நிறுவனம், 320 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் மற்றும் பங்குதாரர்களின் 1 கோடி பங்குகள் வாயிலாக கிடைக்கும் வருவாயை, மூலதன செலவுகள், கடன்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் பொது நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நான்கு நிறுவனங்களின் பங்குகளும் மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.