/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு
/
சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு
சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு
சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு
ADDED : நவ 21, 2024 02:25 AM

பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் முதலீட் டுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சிறுதொழில் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கான விதிகளை 'செபி' கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சிறுதொழில் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கான குறைந்தபட்ச தொகை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்ப கட்டணத்தை, 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் செபி திட்டமிட்டுள்ளது; 4 லட்சம் ரூபாயாக அதிகரிப்பது பற்றி கருத்துகளை தெரிவிக்கவும் கேட்டுக்
கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சிறுதொழில் நிறுவன ஐ.பி.ஓ.,க்கள் அதிகரித்துஉள்ளன. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 15 நிலவரப்படி, 159 நிறுவனங்கள் 5,700 கோடி ரூபாயை ஐ.பி.ஓ.,வில் திரட்டியுள்ளன.