/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., நிறுவனங்களுக்கு செபி 'செக்'
/
ஐ.பி.ஓ., நிறுவனங்களுக்கு செபி 'செக்'
ADDED : ஜன 11, 2025 09:52 PM

புதுடில்லி, ஜன. 12-
சந்தையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள், தங்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள் குறித்த விபரங்களை அளிக்க வேண்டுமென 'செபி' உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தங்கள் நிறுவனம், நிறுவனர் உட்பட நிர்வாகப் பதவியில் உள்ளவர்கள் மீதான வழக்குகள் மற்றும் முழுமையான விபரங்களை தன் விண்ணப்பத்தில் குறிப்பிடாத காரணத்தினால், இரண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டை செபி நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
முதலீட்டாளர்களை பாதிக்கும் என்பதால், செபி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இதனை கையாள்வதாகவும், புகார்களின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, தனியாக தீவிர விசாரணை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

