sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

செபி பதிவு பெற்ற அழைப்புகள் இனி 1600 என்ற எண்ணில் வரும்

/

செபி பதிவு பெற்ற அழைப்புகள் இனி 1600 என்ற எண்ணில் வரும்

செபி பதிவு பெற்ற அழைப்புகள் இனி 1600 என்ற எண்ணில் வரும்

செபி பதிவு பெற்ற அழைப்புகள் இனி 1600 என்ற எண்ணில் வரும்


ADDED : ஏப் 09, 2025 12:07 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்புக்காக, 1600 என்ற புதிய தொலைபேசி எண் வரிசையை, 'செபி' அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து செபி வெளியிட்ட அறிக்கை:

செபியில் பதிவு பெற்ற நிறுவனங்கள், அவற்றின் கீழ் செயல்படும் முறைப்படுத்தப்பட்ட முகவர்கள் அனைவரும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் சமீபத்திய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர் சேவை மற்றும் குரல் அழைப்புக்கு, பிரத்யேக எண் 1600 என்பதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதேபோல, 1600 என்ற வரிசையில் வரும் அழைப்புகள், செபியால் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், முகவர்களிடம் இருந்து வருவதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இதன் வாயிலாக, நிதி மோசடிகளை தவிர்ப்பதுடன், முதலீட்டாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இதைத் தவிர்த்து வேறு எண் வரிசைகளில் இருந்து வரும் அழைப்பு குறித்தும், மோசடி செய்வோர் குறித்தும் புகார் செய்யலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us