தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: குறுகிய கால ஏற்றத்துக்கான வாய்ப்பு முடியவில்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: குறுகிய கால ஏற்றத்துக்கான வாய்ப்பு முடியவில்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: குறுகிய கால ஏற்றத்துக்கான வாய்ப்பு முடியவில்லை


UPDATED : ஜூலை 21, 2026 06:55 AM

ADDED : ஜூலை 21, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 06:55 AM ADDED : ஜூலை 21, 2026 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 95 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 0.61 சதவீத உயர்வுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.16 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.Image 1601116இவற்றில், 'நிப்டி பி.எஸ்.யூ., பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 2.78 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 2.27 சதவீத இறக்கத்துடனும் காணப்பட்டன. வர்த்தகம் நடந்த 3,390 நிறுவனங்களின் பங்குகளில் 1,778 ஏற்றத்துடனும்; 1,501 இறக்கத்துடனும்; 111 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி 14, 21 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,களுக்கு) மேல் வர்த்தகமாகி வருவதால், குறுகிய கால ஏற்றத்திற்கான வாய்ப்பு இன்னும் முற்றிலுமாக முடிவடைந்துவிடவில்லை எனலாம்.

ஆர்.எஸ்.ஐ., சந்தையின் வேகம் மேம்பட்டு வருவதைக் காட்டுகிறது. அதேபோல், ஸ்டோகாஸ்டிக் ஆஸிலேட்டரும் ஏற்றத்திற்கான சிக்னலையே வழங்கி வருகிறது. எம்.ஏ.சி.டி., ஹிஸ்டோகிராம் சற்று பலவீனமடைந்திருந்தாலும், சந்தையின் அடிப்படை ஏற்றப் போக்கு இன்னும் முழுவதுமாக பலவீனமடையவில்லை என்பதையே உணர்த்துகிறது. நிப்டி 24,300--24,350 பகுதி உடனடி ரெசிஸ்டென்ஸ் லெவலாக உள்ளது.இந்த நிலையை வலுவுடன் கடந்து அதற்கு மேலே நிலைத்தால், 24,450-24,500 இலக்கை நோக்கி முன்னேறி செல்வதற்கான வாய்ப்புள்ளது. ஒரு வேளை இறக்கம் வந்தால் 24,150 என்பது உடனடி முதல் ஆதரவு நிலையாக உள்ளது.

அதற்கு கீழே 24,050-24,000 லெவல்தான் அடுத்த ஆதரவாக உள்ளது. இந்த சப்போர்ட் லெவல்களுக்கு மேலே நிப்டி நிலைத்திருக்கும் வரை, ஒட்டுமொத்த டெக்னிக்கல் சூழல் சற்று மிதமான ஏற்றநிலையிலேயே இருக்கிறது எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us