/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சூரிய மின் உற்பத்தி திறன் 100 ஜிகாவாட்டை எட்டியது
/
சூரிய மின் உற்பத்தி திறன் 100 ஜிகாவாட்டை எட்டியது
ADDED : பிப் 07, 2025 10:57 PM

புதுடில்லி:நாட்டின் சூரிய மின் உற்பத்தி திறன் 100 ஜிகாவாட்டை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், 100 ஜிகாவாட் சோலார் மின் உற்பத்தி திறனை எட்டி, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, துாய்மையான, பசுமையான எதிர்காலத்திற்கான இடைவிடாத அர்ப்பணிப்பால் சாத்தியமானது.
வரும் 2030ம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிப்பதே நம் இலக்கு. 2004 - -2014ம் ஆண்டு வாக்கில், 2.82 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மின் நிலையங்கள் நிறுவப்பட்ட நிலையில், 2014 -- 25ம் ஆண்டு காலத்தில், நாட்டில் 100 ஜிகாவாட் திறன் கொண்ட நிலையங்கள் நிறுவப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.