சூரிய மின் உற்பத்தி: 12 ஆண்டுகளில் 155 ஜிகாவாட்டாக உயர்வு
சூரிய மின் உற்பத்தி: 12 ஆண்டுகளில் 155 ஜிகாவாட்டாக உயர்வு
ADDED : ஜூன் 08, 2026 05:59 AM
புதுடில்லி: கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் சூரிய மின்சார உற்பத்தித் திறன் 2.8 ஜிகாவாட்டிலிருந்து 155 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்து உள்ளதாவது:
நாட்டின் சூரிய மின்சார உற் பத்தி கடந்த 2014ல் 2.8 ஜிகாவாட்டாக இருந்தது. நடப்பு 2026ல் 155 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. நாட்டில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடு கள் சூரிய மின்சாரம் வாயிலாக ஒளிர்கின்றன. விவ சாயத்தில் சூரிய மின் உற்பத்தி திறன் இருமடங் காக உயர்ந்துள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சிக்கான சான்றாக உள்ளது.
ஒவ்வொரு வீட்டின் மேற்கூரையிலும் சூரிய மின்சார அமைப்பை நிறுவி, வீடுகள் ஆற்றல் மையங்களாக மாறி வருகின்றன. விவசாய நிலங்களை ஆற்றல் உற்பத்தி மையமாக உருவாக்குவது என்ற உறுதியுடன், நம் நாடு 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
