/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தனிநபர் செலவில் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் முன்னிலை
/
தனிநபர் செலவில் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் முன்னிலை
தனிநபர் செலவில் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் முன்னிலை
தனிநபர் செலவில் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் முன்னிலை
ADDED : டிச 28, 2024 11:11 PM

புதுடில்லி:தனிநபர் செலவழிப்பில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள், ஒட்டுமொத்த நாட்டின் சராசரியை விட அதிக பங்கு வகிப்பது, மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்துஉள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு ஜூலை மாதம் வரை, நாடு முழுதும் உள்ள குடும்பங்களின் நுகர்வு செலவினம் குறித்து, மத்திய அரசு ஆய்வு நடத்தியது. இதற்கான முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள குடும்பங்களின் சராசரி குடும்ப செலவினம் இந்த காலகட்டத்தில் 3.50 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதிகபட்ச மாதாந்திர சராசரி செலவினம் மேற்கொள்ளும் பட்டியலில் சிக்கிம் மாநிலமும்; குறைந்தபட்ச செலவினம் மேற்கொள்வதில் சத்தீஸ்கர் மாநிலமும் முதலிடம் வகிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக 10 மாநிலங்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற செலவினம், தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இதில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஐந்து இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் மாதாந்திர நுகர்வு செலவினம் நகர்ப்புறங்களில் 8,325 ரூபாயாகவும் கிராமப்புறங்களில் 5,872 ரூபாயாகவும் உள்ளது.
குஜராத், மகாராஷ்டிராவின் சராசரி செலவினம், தேசிய சராசரியை ஒட்டியே உள்ளது.
உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தனிநபர்கள், தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாகவே செலவழிக்கின்றனர்.

