
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் பெரும் சரிவுடன் முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1,176 புள்ளிகள் குறைந்து, 78,042 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 364 புள்ளிகள் குறைந்து, 23,588 புள்ளிகளாக இருந்தது.
அமெரிக்க மத்திய வங்கி நிதி கொள்கை நிலைப்பாட்டை அடுத்து, சர்வதேச முதலீட்டாளர்கள் இடர் தவிர்க்கும் போக்கை பின்பற்றியது தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.