உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 06, 2025 12:26 AM

அ நிறம் | அளவு
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில், ஏற்ற இறக்கமான வர்த்தகத்திற்கு பிறகு மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 721 புள்ளிகள் குறைந்து, 79,223 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 184 புள்ளிகள் குறைந்து, 24,005 புள்ளியாக இருந்தது.
எதிர்வர இருக்கும் நிறுவனங்களின் வர்த்தக நிதி நிலை முடிவுகள் காலத்தை முன்னிட்டு, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான போக்கை கடைப்பிடித்தனர். வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள், பங்குகளை விற்ற நிலை மாறி, வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
