
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து எட்டாவது நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில் வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 200 புள்ளிகள் குறைந்து, 75,939 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 102 புள்ளிகள் குறைந்து, 22,929 புள்ளியாக இருந்தது.
சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக நிதி நிலை முடிவுகள் ஆண்டு துவக்கத்தில் இருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாதது உள்ளிட்ட காரணங்களினால்முதலீட்டாளர்கள் மத்தியில் இடர் தவிர்க்கும் அணுகுமுறை நிலவியதாக கருதப்படுகிறது.