ADDED : பிப் 20, 2025 11:43 PM

சரிவு ஒரு தொடர்கதை
முந்தைய இரண்டு வர்த்தக நாட்களை போலவே நேற்றும் இந்திய சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவு செய்தன. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் மீண்டும் ஆரம்பித்த நிலையில், உற்சாகம் இழந்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், சந்தை சரிவுடன் துவங்கியது.
தொடர்ந்து, வாராந்திர காலாவதியை ஒட்டி, வங்கி, நிதித் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று லாபத்தை பதிவு செய்ததால், சந்தையில் அதிகளவில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில், நிப்டி பெரியளவில் மாற்றமின்றியும், சென்செக்ஸ் சற்று இறக்கத்துடனும் நிறைவு செய்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 3,312 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றுஇருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.53 சதவீதம் அதிகரித்து, 76.44 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா அதிகரித்து, 86.65 ரூபாயாக இருந்தது.