ADDED : பிப் 13, 2025 12:02 AM

அலைபாயும் சந்தை
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் நீடிப்பதால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. முற்பகல் வர்த்தக நேரத்தின் போது, நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன. தொடர்ந்து, சில்லரை விலை பணவீக்கம் தொடர்பான தரவுகள் வெளியானதன் காரணமாக சந்தையில் ஊசலாட்டம் நிலவியது. வர்த்தக நேர முடிவில், சந்தை கிட்டத்தட்ட 1 சதவீதம் அளவுக்கு மீண்டு, லேசான இறக்கத்துடன் நிறைவடைந்தது. தொடர்ச்சியாக, ஆறாவது வர்த்தக நாளாக, நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு செய்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 4,969 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.78 சதவீதம் குறைந்து, 76.40 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா குறைந்து, 86.95 ரூபாயாக இருந்தது.