/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை நிலவரம் : மாறியது நான்கு நாள் சரிவு
/
பங்கு சந்தை நிலவரம் : மாறியது நான்கு நாள் சரிவு
UPDATED : ஜூலை 16, 2025 10:44 AM
ADDED : ஜூலை 15, 2025 11:41 PM

மாறியது நான்கு நாள் சரிவு
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள்
ஏற்றத்துடன் முடிவடைந்தன. உலகளாவிய சந்தைகளின் தொடர்ச்சியாக, வர்த்தகம்
ஆரம்பித்த போதே, உயர்வுடன் துவங்கியது. நான்கு நாட்கள் சந்தை கண்ட
சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கடந்த ஜூனில் 6
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் குறைந்தது, அமெரிக்காவுடன்
இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு ஆகிய
காரணங்களால், சந்தை குறியீடுகள் மேலும் உயர்வை கண்டன.
குறிப்பாக,
வாகனம், மருந்து துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கினர்.
இதனால், வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 490 புள்ளிகள் வரை உயர்வு
கண்டது. முடிவில், சற்று குறைந்து 317 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.
நிப்டி, சென்செக்ஸ் தலா 0.50 சதவீத உயர்வுடன் நிறைவு செய்தன.
உலக சந்தைகள்
திங்களன்று
அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை,
ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங்
குறியீடுகள் உயர்வுடனும்; சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடு
சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
* உலகளாவிய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவியது
* சில்லரை விலை பணவீக்கம் சரிந்ததால், ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என நம்பிக்கை
* வாகனம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியது
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
ஹீரோ மோட்டோகார்ப் 4.95
பஜாஜ் ஆட்டோ 2.81
சன் பார்மா 2.76
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
எச்.சி.எல்.,டெக் 3.26
எஸ்.பி.ஐ., லைப் 1.50
எட்டர்னல் 1.37
நிப்டி: 25,195.80
மாற்றம்: 113.50 ஏற்றம் பச்சை
சென்செக்ஸ்: 82,570.91
மாற்றம்: 317.45 ஏற்றம் பச்சை
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் ____ கோடி ரூபாய்க்கு பங்குகளை ___இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.17 சதவீதம் குறைந்து,69.09 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்து, 85.82 ரூபாயாக இருந்தது.