sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : பிப் 03, 2024 01:14 AM

Google News

ADDED : பிப் 03, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடரும் ஏற்றப்போக்கு

 முந்தைய நாள் பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் உலக சந்தை நிலவரம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன தேசிய பங்குச் சந்தை குறியீடு 'நிப்டி' இதுவரை இல்லாத உச்சத்தை நேற்று அடைந்தது. வர்த்தகத்தின் இடையே 429 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்து, 22126 புள்ளிகள் எனும் புதிய உச்சத்தை தொட்டது மும்பை பங்குச் சந்தை குறியீடு 'சென்செக்ஸ்' 1,100 புள்ளிகள் அளவுக்கு ஏறியது குறிப்பிடத் தக்கது. வர்த்தகத்தின் இறுதியில் உச்சத்திலிருந்து சரிந்தாலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு நேற்று 382.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. சென்செக்ஸ் பிரிவில் உள்ள மொத்தம் 30 நிறுவனங்களில், 21 நிறுவன பங்குகள் பச்சையில் ஒளிர்ந்தன இடைக்கால பட்ஜெட் தாக்கல், சந்தையில் எந்த வொரு மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தேர்தலுக்கு முந்தைய சந்தையின் ஏற்றப்போக்கு தொடர்கிறது என்பது சாதகமான அம்சம் கடந்த ஜனவரியில் வாகன விற்பனையும் நல்ல செய்தியை வழங்கியதில் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நிதிப் பற்றாக்குறை இலக்கு குறைக்கப்பட்டது, நிதி துறை நிறுவன பங்குகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. பி.எஸ்.இ., வங்கி குறியீடு சரிவை கண்டது. கிட்டத்தட்ட 270 புள்ளிகள் சரிந்தது ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்து எந்த மாற்றமும் அறிவிக்கப்படாது என வர்த்தகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை யில் முதலீட்டாளர்கள் லாபம் 3.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. இச்சந்தையிலுள்ள 2,036 நிறுவனங்கள் லாபமீட்டின; 1,811 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 96 நிறுவன பங்குகள் விலையில் எந்த மாற்றமும் இல்லை எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் அதிக லாபம் ஈட்டின.



ஏற்றம் கண்ட பங்குகள்

 பி.பி.சி.எல்., பவர் கிரிட் கார்ப் ஓ.என்.ஜி.சி., அதானி போர்ட்ஸ் என்.டி.பி.சி.,



இறக்கம் கண்ட பங்குகள்

 ஐச்சர் மோட்டார்ஸ் ஆக்சிஸ் பேங்க் எச்.டி.எப்.சி., லைப் எச்.டி.எப்.சி., பேங்க் எச்.யு.எல்.,



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 71,645.30நேற்றைய முடிவு: 72,085.63மாற்றம்: 440.33 ஏற்றம் பச்சை



நிப்டி

முந்தைய முடிவு: 21,697.45நேற்றைய முடிவு: 21,853.80மாற்றம்: 156.35 ஏற்றம் பச்சை








      Dinamalar
      Follow us