தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : பிப் 09, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 01:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்செக்ஸ்


முந்தைய முடிவு: 72,152.00நேற்றைய முடிவு: 71,428.43மாற்றம்: 723.57 இறக்கம்



நிப்டி


முந்தைய முடிவு : 21,930.50நேற்றைய முடிவு: 21,718.00மாற்றம்: 212.50 இறக்கம்



விற்பனையால் அதிர்ச்சி


 நேற்று அமெரிக்கா எதுவும் செய்யவில்லை என்பதை பற்றிய வருத்தமில்லை; ஆர்.பி.ஐ. கவர்னர் எதுவும் செய்யவில்லையே என்று தான் நம் சந்தைகள் படபடத்தன. ஏற்கனவே நம் வங்கித் துறையில் போதிய மூலதனம் இல்லை. இந்நிலையில், கவர்னர் வட்டியைக் குறைக்கவில்லை, எப்போது குறைப்பேன் என்றும் சொல்லவில்லை. கூடுதலாக, பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் சொன்னார். அவ்வளவு தான், தனியார் துறை வங்கிகளுடைய பங்குகளை, வர்த்தகர்கள் விற்றுவிட்டு வெளியேறத் துவங்கி விட்டனர்
 கிராமப்புறங்களில் தேவைகள் பெருகவில்லை என்பதால், அங்கே பணசுழற்சி இல்லை. அதனால், நுகர்பொருள் நிறுவனங்களின் விற்பனை சரிந்து போனது. அது தான் மூன்றாம் காலாண்டு முடிவுகளில் வெளிப்பட்டது. இதனைத் தொடர்ந்து நுகர்பொருள் நிறுவனங்களும், வாகனப் பங்குகளும் சரிந்தன
 போதாததற்கு, பிப்ரவரி 7ம் தேதி, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 1,691 கோடி ரூபாய் அளவுக்கு நம் நாட்டுப் பங்குகளை விற்பனை செய்துள்ளனர் வங்கிகளில் மூழ்கிப் போன சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக அமைக்கப்பட்ட தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம், பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை, ஆனால், வரும் நிதியாண்டின் இறுதிக்குள் ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன்களை எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது என்று, நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி கூறினார்
 இதுநடுவே ஐ.டி.சி. நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் தன் பங்கைக் குறைத்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னது, வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 சந்தை நேர முடிவில், எண்ணெய், எரிவாயு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பொதுத் துறை பங்குகள் பிரகாசமாக ஜொலிக்க, வாகனங்கள், வங்கிகள், மனைவணிகம், மூலதனப் பொருட்கள், நுகர்பொருட்கள் துறை பங்குகள் ஒளிமங்கி காட்சியளித்தன.



ஏற்றம் கண்ட பங்குகள்


 எஸ்.பி.ஐ.,  பி.பி.சி.எல்.,  பவர் கிரிட் கார்ப்பரேஷன்  டி.சி.எச்.,  எச்.சி.எல். டெக்னாலஜீஸ்



இறக்கம் கண்ட பங்குகள்


 பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்  ஐ.டி.சி.,  கோடக் மஹீந்திரா வங்கி  ஆக்ஸிஸ் வங்கி,  நெஸ்லே இந்தியா



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us