சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : பிப் 15, 2024 01:12 AM
முந்தைய முடிவு: 71,555.19நேற்றைய முடிவு: 71,833.17மாற்றம்: 277.98 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு : 21,743.25நேற்றைய முடிவு: 21,840.00மாற்றம்: 96.70 ஏற்றம் பச்சை
அமெரிக்கா ஒன்றும் சுரத்தாக இல்லை. அங்கே வெளியான சில்லரை பணவீக்க மதிப்பீடு எதிர் பார்த்ததற்கு மேல் அதிகமாக இருந்தது. அதனால், அவ்வளவு சீக்கிரத்தில் ஜெரோம் பவுல், வட்டி விகிதத்தை குறைக்கப் போவதில்லை. இதனால், அங்கேயுள்ள நிறுவனங்கள், புதிய முதலீடுகள் எதிலும் இறங்காது, பொருளாதார தேக்கநிலைக்கு இதுவே காரணம் ஆகிவிடலாம் என்ற முடிவுக்கு அமெரிக்க வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வந்துவிட்டனர். பங்குகள் விலை சரிந்தன. அதன் பாதிப்பு காலையில் இருந்தே நம் சந்தைகளில் தெரிந்தது. 'கேப் டவுன்' ஓப்பனிங் தான். மதியம் வரை சிவப்புக் கடல் தான் மதியத்துக்கு மேல் இரண்டு செய்திகள், கொஞ்சம் தெம்பைக் கொடுத்தன. மாநிலங்கள் மூலதன முதலீடுகளைச் செய்வதற்காக, மத்திய அரசு வட்டியில்லா கடன் கொடுத்து வருகிறது. கடந்த நிதியாண்டின், முதல் ஒன்பது மாதங்களோடு ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மேற்சொன்ன வட்டி யில்லா கடனால், மாநிலங்களில் மூலதனச் செலவுகள் 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று ஒரு தனியார் அறிக்கை சொன்னது இரண்டாவது செய்தி, கடந்த டிசம்பரில் 0.73 சதவீதமாக இருந்த டபிள்யூ.பி.ஐ., எனப்படும் மொத்த விலை பணவீக்கக் குறியீடு, ஜனவரியில் 0.27 சதவீதமாக குறைந்தது. இந்தச் சரிவுக்கு காரணம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், இதர பொருட்களின் விலை சரிவுதான். 'தேன் வந்து பாயுது காதினிலே' என்று வர்த்தகர்கள் கொண்டாடினர் சந்தை நேர முடிவில், பொதுத்துறை வங்கிகளும் எண்ணெய், எரிவாயு குறியீடுகள் 3 சதவீத அளவுக்கு உயர்ந்தன. வாகனங்கள், வங்கிகள், நுகர்பொருட்கள், மூலதனப் பொருட்கள், உலோகம், மின்சாரம், மனைவணிகம் சார்ந்த பங்குகள் 1-2 சதவீத வளர்ச்சி அடைந்தன. தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் துறை சார்ந்த பங்குகள் மட்டும் வீழ்ந்தன.
பி.பி.சி.எல்., எஸ்.பி.ஐ., கோல் இந்தியா ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி
டெக் மஹிந்திரா சிப்லா சன் பார்மா டி.சி.எஸ்., டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்